ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் தயார்
கொழும்பு, மார்ச்9 இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா
மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அந்த ஆவணங்கள் ராணுவ தலைமைத் தளபதி
ஜகத் ஜெயசூர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை ராணுவத்தின்
வழக்கறிஞர் பிரிவு இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆய்வு செய்து
வருவதாக ராணுவத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அவர் மீது ராணுவச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக 5 குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத்
தொடர்ந்து பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து ராணுவ
நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்சேகா
மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் 22 தினங்களுக்குள்
சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், 35 தனிநபர்கள், 22 ராணுவ வீரர்கள், 7
காவல்துறையினர் மற்றும் 6 சிவிலியன்களிடம் இருந்து பொன்சேகா மீதான
குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தின்
செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதனிடையே சரத்பொன்சேகா அமெரிக்காவில் உள்ள தனது மகளுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|