யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம்
கொழும்பு, மார்ச்.9 இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும்
யாழ்ப்பாணம் பகுதியில் தூதரக அலுவலகம் ஒன்றை திறக்க இந்தியா
திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய
வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் இதனை நேற்று (மார்ச்.8)
கொழும்புவில் இந்திய பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
3 நாள்
சுற்றுப்பயணத்தின் போது அவர் அதிபர் மகிந்தா ராஜபக்சே, வெளியுறவு
அமைச்சர், வெளியுறவுச் செயலர், தமிழ் கட்சிகிளின் பிரிதிநிதிகளுடன் பேச்சு
நடத்தினார்.
முள்வேளி முகாம்களில் உள்ள தமிழர்கிளை மீள்
குடியமர்த்துவது குறித்து அவர் பேச்சு நடத்தினார். மீனவர்கள்
தாக்கப்படுவதை தடுப்பது குறித்தும் பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணம்
பகுதியில் தூதரகம் அமைக்கும் இந்தியாவின் விருப்பத்தை அதிபரிடம்
தெரிவித்ததாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் நிருபமா
கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் வெளியுறவு அமைச்சர் பொகலகாமா
இந்தியா விரும்பினால் மேலும் தூதரகங்களை திறக்கலாம் என்று கூறியிருந்தது
குறிப்பிடத்தக்கது.
|