ஏப்.9 இலங்கை பாராளுமன்ற தேர்தல்
கொழும்பு, பிப்.8 இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர்
தேர்தலில் மகிந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். நாளை இரவு இலங்கை
பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்
பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அனேகமாக ஏப்ரல்
மாதம் 9-ந் தேதி இலங்கை பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படலாம்
ஜனாதிபதி
தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து உற்சாகமடைந்துள்ள ராஜபக்சே சூட்டோ டு சூடாக
பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார். இலங்கை
பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் நடந்தது.
வெள்ளிக்கிழமையுடன் அது நிறைவு பெற்றது. இதையடுத்து பாராளுமன்றம்
விரைவில் கலக்கப்படும் என்பது உறுதியானது. நாளை இரவு இலங்கை பாராளுமன்றம்
கலைக்கப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபர்
ராஜபக்சே தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா சென்றுள்ளார். நாளை அவர்
நாடு திரும்ப உள்ளார். கொழும்பு திரும்பியதும் அவர் பாராளுமன்றத்தை
கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்
பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அனேகமாக ஏப்ரல்
மாதம் 9-ந் தேதி இலங்கை பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று
இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|