Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
 » இலங்கை
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
உலகம்
 
அமெரிக்க மின் நிலையத்தில் விபத்து: 5 பேர் பலி


நியூயார்க், பிப்.8  அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துவரும் மின்னுற்பத்தி நிலையம் ஒன்றில் நேற்று நடந்த எரிவாயு வெடிப்பில் 5 பேர் பலியானார்கள். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து தென்மேற்கே, கனக்டிகட் என்னும் நகரில் உள்ள மின் நிலையத்தில் பயங்கர சப்தத்துடன் கலன் வெடித்தது. இன்னும் முழுமையாகப் பணி துவக்கப்படாத இந்த மின்னுற்பத்தி நிலையத்தில், இயற்கை எரிவாயு குழாய்களின் செயல்பாடு பற்றிய சோதனை நேற்று நடந்தது. அப்போது பலத்த சப்தத்துடன் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் 50 முதல் 60 பேர் வரை பணியாற்றிக் கொண்டிருந்ததாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவத்தால் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த சுமார் 50க்கும் மேற்பட்டோ ர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர் உள்ளிடவை விரைந்துள்ளன. பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட்டதால் அப்பகுதியை சுற்றி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகைமண்டலமாக காட்சியளித்தது. இங்கு மேலும் மின்கலன்கள் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. குண்டு வெடிப்பா என்ற கேள்விக்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றனர் அதிகாரிகள்.

620 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடையும் தறுவாயில் உள்ளது. இயற்கை எரிவாயு மூலம் மின்னுற்பத்தி செய்யும் வகையில் இந்த நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    Print        Tell friend        Top


Other Articles:
ஈராக் குண்டு வெடிப்பு - 27 பேர் உயிரிழப்பு (02.05.2010)
குண்டு வெடித்து பாகிஸ்தானில் 11 பேர் பலி (02.05.2010)
கலிபோர்னியாவில் நிலநடுக்கம் (02.05.2010)
வருத்தமளிக்கிறது: ஷாருக் கான் (02.04.2010)
ராஜபட்சேவை கொல்ல சதி: பிரிகேடியர் உள்பட 37 பேர் கைது (02.04.2010)
100 ஆண்டு வாழ மாத்திரை (02.04.2010)
ஆஸ்திரேலியாவின் அதி புத்திசாலியாக இந்திய மாணவி தேர்வு (02.03.2010)
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி (02.03.2010)
தலாய்லாமாவை ஒபாமா சந்திக்கக்கூடாது - சீனா எச்சரிக்கை (02.03.2010)
ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை (02.02.2010)



 
::| Hot News
சீனா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 46 பேர் பலி