மார்ச்.13 நாட்டியாஞ்சலி விழா துவக்கம்
சிதம்பரம், மார்ச்.9 நாட்டியக் கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை
நடராஜப் பெருமானுக்கு அஞ்சலியாக அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சிதான்
நாட்டியாஞ்சலி. இந்த நாட்டியாஞ்சலி விழா மார்ச்.13ம் தேதி சிதம்பரம்
நடராஜர் கோவிலில் துவங்குகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம்
நடராஜர் கோவிலில் கடந்த 1981ம் ஆண்டு, முதல் முறையாக நாட்டியாஞ்சலி
நிகழ்ச்சி துவங்கியது. இந்த ஆண்டு 29ஆவது நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ஆம்
தேதி துவங்கி, 17ஆம் தேதி தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கின்றன. பல்வேறு
நாடுகளை சேர்ந்த பிரபல நாட்டிய கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
துவக்க
நாள் நிகழ்ச்சியன்று மகா சிவராத்திரி தினம் என்பதால், அன்று விடிய, விடிய
நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நாட்டியக் கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை
நடராஜப் பெருமானுக்கு அஞ்சலியாக அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சிதான்
நாட்டியாஞ்சலி. இறை உணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்திருப்பதால்
மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நாட்டியாஞ்சலி சிறப்பு பெறுகிறது.
மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்கின்றனர்.
பாரதத்தின்
பாரம்பரியம் மிக்க பரதம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், சத்ரியா வகை
நடன கலைஞர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்கின்றனர்.
|