தென்பெண்ணையாறு- செய்யாறு இணைப்பு
திருவண்ணாமலை, பிப்.2 தென்பெண்ணையாறு- செய்யாற்றை இணைக்கும்
திட்டம் ரூ.180 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின்
ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு
கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே
சாத்தனூரில் கட்டப்பட்டுள்ள அணையின் மொத்த உயரம் 119 அடியாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் ஏக்கர், விழுப்புரம்
மாவட்டத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன
வசதி பெறுகின்றன. தற்போது அணையில் மொத்தம் 107 அடி உயரம் நீர் உள்ளது.
விவசாயிகளின்
கோரிக்கையையடுத்து, தமிழக அரசு உத்தரவின்படி சாத்தனூர் அணையின் வலது,
இடதுபுறக் கால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. மொத்த
பாசனப் பரப்பு 35.6 லட்சம் ஹெக்டேராகும். ரூ.2,547 கோடி செலவில் 6.5
லட்சம் ஹெக்டர் நிலங்கள் பயன்பெறும் வகையில், மாநில நீர்வளத் திட்டம் 6
ஆண்டுகள் செயல்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும்
ரூ.248 கோடி செலவில் 5,570 ஏக்கர் நிலங்கள் இத்திட்டத்தின் மூலம்
புனமரமைப்பு செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.54.6 கோடி செலவில்
24,291 ஏக்கர் நிலங்கள் பயனபெறும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டு ரூ.197 கோடி செலவில் 14,633 ஏக்கர்
நிலங்கள் சீர்ப்பெறும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.
பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தண்ணீர்
வராததாலும் சாத்தனூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. வரும் ஏப்.24-ம்
தேதி வரை 44 நாள்கள் 6 தவணைகளாக 2158 மில்லியன் கன அடி நீர் அணையில்
இருந்து திறக்கப்படும் என்றார் அமைச்சர்.
|