மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
புதுதில்லி, மார்ச்.9 மக்களவையிலும் எதிர் கட்சி எம்.பி.,க்கள்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்
குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதை பொருட்படுத்தாமல் சபாநாயகர்
மீராகுமார் கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்தினார். கேள்வி நேரம் முடிந்த
பின் அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடிய போதும்
அமளி தெதடர்ந்ததால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்புகளுக்குப் பிறகு அவை மீண்டும் 4 மணிக்கு கூடிய போதும்
எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
|