7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் : அன்சாரி உத்தரவு
புதுதில்லி, மார்ச்.9 மாநிலங்களவையில் நேற்று (மார்ச்.8)
அத்துமீறி மசோதா நகல்களை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்ட எம்.பி.,க்கள்
7 பேரை இன்றைய கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஹமீது அன்சாரி
உத்தரவிட்டார்.
நேற்று மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தபோது, அந்த மசோதாவை
கிழித்தெறிந்து மாநிலங்களவை தலைவர் இருக்கையில் இருந்த பேனாஸ்டேண்ட்
மற்றும் மைக்குகளை பிடுங்க முயன்று கடும் அமளியில் ஈடுபட்ட 7 எம்பிக்களை
மாநிலங்களவை தலைவர் அமீது அன்சாரியை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை
எடுத்துள்ளார்.
சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதாதள், லோக் ஜனசக்தி,
ஐக்கிய ஜனதாதள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இசாஜ் அலி, சுபாஷ் யாதவ், சபீர்
அலி, நந்ட் கிஷோர் யாதவ், கமல் அக்தர், அமீர் ஆலம் கான், வீர் பால்சிங்
யாதவ் ஆகிய 7 எம்பிக்களும் பட்ஜெட் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள்
முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை
மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு 2ஆவது நாளாக எதிர்கட்சிகள்
எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக அவையை பிற்பகல் 2 மணி
வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஹமீது அன்சாரி உத்தரவிட்டார்.
|