பிப். இறுதியில் பெண்ணாகரம் தொகுதி வாக்காளர் பட்டியல்
புதுதில்லி, பிப்.8 இம்மாதம் இறுதியில் பெண்ணாகரம் தொகுதியின்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல்
அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
இது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தில்லியில் கூறியதாவது:-
பெண்ணாகரம்
தொகுதி வாக்காளர் பட்டியலில் 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள்
விடுபட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் காரணமாக பெண்ணாகரம் தொகுதி வாக்காளர்
இறுதி பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட
உள்ளது.
பெண்ணாகரம் தொகுதி வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும்
பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணி இம்மாதம் இறுதியில் நிறைவு
பெறும். அதன் பின்னர் பெண்ணாகரம் தொகுதி வாக்காளர் இறுதி பட்டியல்
வெளியிடப்படும்.
அதன் பின்னர் பெண்ணாகரம் தொகுதி இடைத்தேர்தல்
பற்றிய அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷன் 10 நாட்களுக்குள் அறிவிக்கும்.
இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
|