Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
 » தேர்தல் 2009
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
இந்தியா
 
காஷ்மீரில் பெண் தீவிரவாதி கைது


கஷ்மீர், பிப்.8  ராணுவ நடமாட்டம் பற்றி உளவு பார்த்ததாக காஷ்மீரில் பெண் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீர் போலீசாரிடம் சிக்கிய அந்த பெண் தீவிரவாதியின் பெயர் ஹபீஷா பனோ. 27 வயதாகும் இவர் ஹர்கத்-உல்-ஜிகாதி தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கண்டு பிடித்தனர்.
 
கடந்த வாரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்ப்பா, ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதில் காஷ்மீரில் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தீவிரவாதிகள் தீர்மானித்தனர்.
 
பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முன்பு போல எல்லை வழியாக அதிக அளவில் ஊடுருவ முடியவில்லை. இதையடுத்து வேறு புதிய திட்டங்களை தீவிரவாதிகள் கடைப்பிடிக்கத் தொடங்கி உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தங்கள் ஆதரவு பெண்களை அவர்கள் முழு அளவில் தீவிரவாத செயல்களுக்காக மாற்றத் தொடங்கியுள்ளனர் என்பன போன்ற  இந்த தகவல்கள் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பிடிபட்டுள்ள பெண் தீவிரவாதி மூலம் தெரியவந்துள்ளது.
 
காஷ்மீர் போலீசாரிடம் சிக்கிய அந்த பெண் தீவிரவாதியின் பெயர் ஹபீஷா பனோ. 27 வயதாகும் இவர் ஹர்கத்-உல்-ஜிகாதி தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கண்டு பிடித்தனர்.
 
அவளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, அவள் போலீசாரிடம் இருந்து தப்பியபடி இருந்தாள். ஜம்மு நகரில் இவள் அடிக்கடி தான் இருப்பிடத்தை மாற்றியபடி இருந்தாள்.
 
ஹபீஷா பார்ப்பதற்கு ரொம்ப அப்பாவி போல காணப்படுகிறார். குழந்தைகளுடன் அவர் சராசரி வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாக மற்றவர்கள் அவளை சாதாரணமாக நினைக்கும் படி நடந்து கொண்டாள்.
 
காஷ்மீர் போலீசாரின் நீண்ட நாள் தேடுதல் வேட்டைக்கு நேற்று தான் பலன் கிடைத்தது. ஜம்மு நகர் அருகில் ஒரு மறைவிடத்தில் அவள் பிடிபட்டாள். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை அவள் ஒத்துக்கொண்டாள்.
 
எல்லையில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளுடன் இவள் ரகசியமாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவ வீரர்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை இவள் தீவிரவாதிகளுக்கு தெரிவித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவள் செய்த உதவிகள் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
ஹபீஷா போன்று ஜம்மு நகரில் மேலும் சில பெண் தீவிரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த பெண்கள் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று ஆயுதப்பயிற்சி பெற்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
கடந்த ஆண்டு காஷ்மீரில் ஆயிஷா மாசிக் என்ற பெண் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். எல்லை தாண்டி வரும் போது ராணுவ வீரர்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். காஷ்மீரில் நாச வேலைக்கு பெண்களை தீவிரவாதிகள் தயார்படுத்துவது அப்போது தான் உறுதிபடுத்தப்பட்டது. சில பெண்களை தற்கொலை தீவிரவாதிகளாகவும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து காஷ்மீரில் சந்தேகப்படும் படியான பெண்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Print        Tell friend        Top


Other Articles:
மாநிலங்களுக்கு பிரதமர் வலியுறுத்தல் (02.08.2010)
மின்னணு கழிவுகள் அளவு 8 லட்சம் டன்னாக உயரும் (02.06.2010)
மம்தா பானர்ஜியை சந்தித்து ஸ்டாலின் பேச்சு (02.06.2010)
ராகுல் ஷுவை தூக்கிய மந்திரி; சிவசேனா கண்டனம் (02.06.2010)
விலைவாசி விரைவில் குறையும்; பிரதமர் (02.06.2010)
ராகுல் மின்சார ரயிலில் மும்பை பயணம் (02.05.2010)
பெல்லாரி விடுதி விபத்து: 10 லட்சம் இழப்பீடு கோரிக்கை (02.05.2010)
ஷாருக்கான் படம்: கலவரம் வெடிக்கும், சிவ்சேனா சூசகம் (02.05.2010)
காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் (02.04.2010)
கட்சி என்னை குப்பைத்தொட்டி போல் பயன்படுத்தியது - அமர்சிங் (02.04.2010)



 
::| Hot News
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி
பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
10,000 கோடி: ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ஊழல்-காங்கிரஸ் புகார்
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை