இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம் : ராகுல்
பாட்னா, பிப 2 இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது
என்று பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர்
ராகுல் காந்தி கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து
கொண்டபோது அவர் பேசுகையில், இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது
என்றார். தான் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரி இல்லை என்றும், அவரது கொள்கையை
மட்டுமே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். பீகார், உத்திரபிரதேசத்தில்
இருந்து வருபவர்கள் மீது சிவசேனாவின் கொள்கை தவறானது. சிவசேனா கட்சியினர்
தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். மும்பை தாக்குதல் நடந்த போது,
என்.எஸ்.ஜி., படையில் இருந்த பலர் பீகார், உ..பி., யை சேர்ந்தவர்கள்
என்பதை சிவசேனா கட்சியினர் மறந்துவிடக்கூடாது என்றும் ராகுல்
தெரிவித்தார்.
|