நாக்பூர் டெஸ்ட்: இந்தியா பாலோ ஆன்
நாக்பூர், பிப்.8 நாக்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்
இந்தியா பலோ ஆன் ஆனது. தென்ஆப்ரிக்கா இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி
நாக்பூரில் நடைபெற்று வருகிறது. வீரேந்திர சேவாக் சதம் அடித்தார். 233
ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. தென் ஆப்ரிக்கா தரப்பில் டேல் ஸ்டைன்
7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்ரிக்காவுடன் இந்தியா 325 ரன்கள்
பின்தங்கியதால், இந்தியா பாலோ ஆன் ஆனது.
தென் ஆப்பிரிக்கா முதல்
இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
ஹசிம்அம்லா 253 ரன்னும் (அவுட் இல்லை), காலிஸ் 173 ரன்னும் எடுத்தனர்.
ஜாகீர்கான் 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்சை
விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்
எடுத்து இருந்தது. காம்பீர் 12 ரன்னுடனும், ஷேவாக் 9 ரன்னுடனும் ஆட்டம்
இழக்காமல் இருந்தனர். இன்று (பிப்.8) 3ஆவது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். தென்
ஆப்பிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி திணறியது. 56
ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட் விழுந்தது. தொடக்க வீரர் காம்பீர் 12
ரன்னில் மார்கல் பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்து
களம் வந்த தமிழக வீரர் முரளி விஜய் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். வங்காளதேச
தொடரில் முத்திரை பதித்த தெண்டுல்கர் இன்று சொதப்பி விட்டார். அவர் 7
ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார். விஜய், தெண்டுல்கர்
ஆகியோரது விக்கெட்டை ஸ்டெயின் கைப்பற்றினார். 3ஆவது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன், மற்றொரு தமிழக வீரரான பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். 3ஆவது
விக்கெட்டுக்கு ஷேவாக்குடன், மற்றொரு தமிழக வீரரான பத்ரிநாத் ஜோடி
சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. பத்ரிநாத் தடுப்பு ஆட்டத்தில்
ஈடுபட்டார். ஷேவாக் அதிரடியாக ஆடினார். அவர் சிறப்பாக விளையாடி 50 ரன்னை
தொட்டார்.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 3 விக்கெட்
இழப்புக்கு 119 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 63 ரன்னுடனும் (90 பந்து. 8
பவுண்டரி), பத்ரிநாத் 21 ரன்னுடனும் (54 பந்து. 1 பவுண்டரி) ஆட்டம் இழக்க
மல் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து
ஆடினார்கள். ஷேவாக் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 134
பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்னை தொட்டார்.
75ஆவது டெஸ்டில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 18ஆவது சதம் ஆகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-வது செஞ்சூரியை அடித்தார். சதம்
அடித்த சேவாக் 109 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து பத்ரிநாத்துடன் கேப்டன்
தோனி களம் இறங்கினார். பத்ரிநாத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
மதியம் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்
எடுத்திருந்தது.
தேனீர் இடைவேளைக்குப்பின் இந்தியாவின் விக்கெட்
சரிய ஆரம்பித்தது. தோனி 6 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் இந்தியா
விக்கெட்டை அனைத்தையும் ஸ்டெய்ன் வீழ்த்தினார். இதனால் இந்தியா 233ரன்னில்
ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.
தேனீர் அடைவேளைக்குப்பின் இந்தியா 12
ரன்னில் 6 விக்கெட் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா
தரப்பில் ஸ்டேன் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட் வீழ்த்தினார். பின்
இந்தியா 325 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.
காம்பீர் 1 ரன்னில் மோர்க்கல் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
அடுத்து விஜய் சேவாக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் விளையாடி
வருகின்றனர்.
|