ஆஸ்திரேலியா அபார வெற்றி
மெல்பர்ன், பிப்.8 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு
நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
பெற்றது.
மெல்பர்னில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா
முதலில் ஆடி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியின்
வாட்சன் 59 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாண்டிங் 49 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் போலர்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர்
ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து
ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய
தரப்பில் ரெயான் ஹாரிஸ் மற்றும் ஹாரிட்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
|