சமூகத்திற்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம்
யுவா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் முற்றிலும் புதியவர்களை வைத்து
தயாரிக்கும் படம் 'இலக்கணப் பிழை'. நாட்டில் பெருகி வரும் குற்றங்களில்
கள்ளத்தொடர்பும் ஒன்று இதனால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து
இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.இப்படத்தை பற்றி கூறிய
இயக்குநர், "பொழுதுபோக்கிற்காக மட்டும் திரைப்படங்கள் அல்ல, அதன் மூலம்
சில நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். எனவேதான் என்
படத்தின் மூலம் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல நினைத்த நான் கற்பு, காதல்,
நட்பு இவற்றின் இலக்கண மீறல்களால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி படமாக
சமூகத்திற்கு தருகிறேன்" என்றார்.கதாநாயகர்களாக ஆறுமுகம், சத்யா
ஆகியோர் நடிக்க, கதாநாயகிகளாக சிவாதிஸ்ரீ, ரிஹானா ஆகியோர்
அறிமுகமாகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜோ இயக்கியுள்ள
இப்படத்திற்கு ரமேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருணகிரி
இசையமைத்துள்ளார்.
|