Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
ராணுவ வாகனத்தில் குண்டு வெடிப்பு: கஷ்மீரில் 2 வீரர்கள் பலி ; விளை நிலத்தை ஆர்ஜிதம் - மாற்று வேலை; சோனியாகாந்தி உறுதி ; ஆந்திராவில் வெள்ளம் : எண்பதாயிரம் பேர் வெளியேற்றம் ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 » சினிமா கேலரி
 » சினிமா டிரெய்லர்
 
 
பொழுதுபோக்கு
 
நித்யானந்தரைப் பற்றி நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி


நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா, படுக்கையில் உருண்டு புரண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதும் இதில் சம்மந்தப்பட்ட நித்யானந்த சாமியாரும், நடிகை ரஞ்சிதாவும் தலைமறைவாகி விட்டார்கள்.

கும்பமேளாவில் சாமியார் இருப்பதாக அவரது ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். மேலும் வீடியோவில் சாமியாருடன் இருப்பவர் நடிகை ரஞ்சிதாதான் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

நடிகை ரஞ்சிதா, எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அவர் கேரளாவில் ரகசிய இடத்தில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. நடிகை ரஞ்சிதா செல்போன் மூலம் குமுதம் ரிப்போர்டர் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?

ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...

அந்த ஆபாச காட்சிகள்...

காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?

நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?

உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?

பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?

அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்..."

இவ்வாறு நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார்.

    Print        Tell friend        Top


Other Articles:
குறும்பட இயக்குநர் இயக்கும் 'கோணங்கிகள்' (03.09.2010)
'அவதார்' படத்தை தோற்கடித்த 'தி ஹார்ட் லாக்கர்' (03.09.2010)
'3டி' யில் வரும் மற்றொரு ஆங்கிலப்படம் (03.09.2010)
ஜெட் வேகத்தில் தயாரான 'சிங்கம்' (03.08.2010)
லிங்குசாமிக்கு கைகொடுத்தார் தயாநிதி அழகிரி (03.08.2010)
ஆர்.கே-வுடன் ஜோடி சேர்ந்த சதா (03.08.2010)
என்னால் இப்படிதான் படம் எடுக்க முடியும்" - கெளதம் அதிரடி (03.06.2010)
உலக அழிவைச்சொல்லும் ஆங்கிலப்படம் 'கருட யுத்தம்' (03.05.2010)
டிவி நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் (03.05.2010)
நடிகர் சத்யாராஜும், போலிச் சாமியாரும் (03.04.2010)



 
::| Hot News
விஷ்னுவை சோகத்தில் ஆழ்த்திய பூர்ணா