Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 » சினிமா கேலரி
 » சினிமா டிரெய்லர்
 
 
பொழுதுபோக்கு
 
அஜீத்தின் ஆவேசத்திற்கு கைதட்டிய ரஜினி


தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்காக திரையுலகம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் அஜீத், விஜய் இணைந்து நடனமாடுகிறார்கள் என்றெலாம் செய்திகள் வெளியாயின. இதுபோன்ற விழாக்களுக்கு அஜீத் வருவதே ஆச்சரியம், அதிலும் அஜீத்தின் நடனமா! என காத்திருந்தவர்களுக்கு பிப்ரவரி 6ஆம் தேதியன்று விடை கிடைத்தது.

நிகழ்ச்சியில் மேடை ஏறிய அஜீத் நடனம் ஆடவில்லை. ஆனால் மற்றவர்களை ஆட்டம் காணும் அளவிற்கு தனது ஆக்ரோச பேச்சை வெளிப்படுத்தினார்.

"சினிமா நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கிறார்கள்.

ஆனால் எனக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை.

நடிகர்கள் யாரும் அரசியலுக்குச் செல்ல வேண்டாம். நடித்து முன்னேறுங்கள். நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும். போராட்டங்களிலிருந்து விலகியிருந்தால் எங்கள் தமிழ் உணர்வை, விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலைப் புகுத்தாதீர்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் இருக்கிறது. எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள்" என்று ஆவேசத்துடன் பேச்சை முடித்த அஜீத்திற்கு, ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார்.

    Print        Tell friend        Top


Other Articles:
அறிமுக நாயகனின் அடுத்த படம் (02.08.2010)
பிரியதர்ஷன் படத்தில் ரீமா சென் (02.08.2010)
'ஆயிரத்தில் ஒருவன்' தடை கோரி வழக்கு (02.06.2010)
தமிழ் பெண்களை இழிவாக பேசிய நடிகர் ஜெயராம் (02.05.2010)
சினிமாவில் நுழையும் முதல்வரின் மற்றொரு பேரன் (02.05.2010)
செக்ஸ் தொல்லை: டி.வி. டைரக்டர் பாஸ்கருக்கு குஷ்பு கண்டனம் (02.04.2010)
'கோ' படத்தில் இருந்து விலகிய சிம்பு (02.04.2010)
அஜீத்க்கு வந்த இயக்குநர் ஆர்வம் (02.04.2010)
உதவி இயக்குநர்கள் இணைந்து தயாரிக்கும் படம் (02.04.2010)
சிம்பு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து (02.04.2010)



 
::| Hot News
விஷ்னுவை சோகத்தில் ஆழ்த்திய பூர்ணா