பிப்ரவரியில் வாகன விற்பனையில் புதிய சாதனை
மார்ச்.8 கடந்த பிப்ரவரி மாத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக
எண்ணிக்கையிலான கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை
செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் தான் அதிக வாகனங்கள்
விற்பனை ஆகி இருந்தது என்றும் அந்த சாதனையை பிப்ரவரி மாத விற்பனை
முறியடித்துள்ளது என்றும் வாகன உற்பத்தி துறை தெரிவித்துள்ளது.
பட்ஜெட்டில்
கார்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் காரணமாக மக்கள் அதிக
எண்ணிக்கையில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்கியிருப்பதாக
கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 783
வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துடன்
ஒப்பிடுகையில் இது 34.8 சதவிகிதம் கூடுதலாகும்.
கடந்த ஜனவரி மாதத்தில் 11 லட்சத்து 14 ஆயிரத்து 157 வாகனங்கள் விற்பனை ஆகியது தான் இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. கார்களைப்
பொறுத்த வரையில் பிப்ரவரியில் மொத்த 1 லட்சத்து 53, 845 கார்கள்
விற்பனையாகி உள்ளன. ஜனவரி மாதத்தில் இது 1 லட்சத்து 45,905 கார்களாக
இருந்தது.
|