நேரடி வரி வசூல் உயர்வு
புதுதில்லி, மார்ச்.5 பிப்ரவரி 2010 வரையிலான இந்த
நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் நிகர நேரடி வசூல் ரூ.2,78,373 கோடியாக
உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான ரூ.2,58,902 கோடியுடன்
ஒப்பிடுகைளில் இது 7.5 சதவீதம் உயர்வாகும்.
வர்த்தக நிறுவனங்களின்
வரி வசூல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.89 சதவீதம் உயர்ந்து
ரூ.1,80,318 கோடியாக உள்ளது. தனிநபர் வருமான வரி 1.84 சதவீதம் உயர்ந்து
ரூ.97,692 கோடியாக உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நேரடி வரி வசூல்
முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 27.54 சதவீதம் உயர்ந்து
ரூ.14,675 கோடியாக உள்ளது. ஜனவரி 2010-ல் நேரடி வரி வசூல் 19.84 சதவீதம்
குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத்தில் வர்த்தக நிறுவனங்களின் வரி வசூல் 16.87 சதவீதமும், தனிநபர் வருமான வரி வசூல் 37.58 சதவீதமும் உயர்ந்துள்ளது.
|