தங்கம் விலை கிடுகிடு சரிவு
சென்னை, பிப்.6 கடும் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை
நேற்று (பிப்.5) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 குறைந்தது. ஒரு பவுன் ரூ.12
ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. `ஜெட்' வேகத்தில்
அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வீழ்ச்சி அடைந்து வருவது நகை
பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின்
விலை கடந்த சில மாதங்களாக `புயல்' வேகத்தில் அதிகரித்து வந்தது. காலையில்
குறைந்த அளவில் விலை உயரும் தங்கம், மாலையில் அதிக அளவில் உயர்ந்து வருவது
அன்றாட கதையாக இருந்து வந்தது. தற்போது, 4 நாட்களாக தங்கத்தின்
விலை குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.1,554-க்கும்,
பவுன் 12 ஆயிரத்து 432-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று
தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி அடைந்தது. அதாவது, ஒரு கிராம்
ரூ.1,501-க்கும், ஒரு பவுன் 12 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனை
செய்யப்பட்டது. ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.424 ரூபாய் குறைந்து
உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு 804 ரூபாய்க்கு மேல்
குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக தங்கத்தின் விலை
இந்த அளவுக்கு குறைந்ததே கிடையாது. இந்த விலை குறைவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நேற்று நகை கடைகளில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்பட்டது.
|