வாகன சோதனை: பாமக-போலீசார் மோதல்
பென்னாகரம், மார்ச்.9 இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரம்
தொகுதியில் பிரசாரம் செய்ய பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ் வாகனத்தில்
வந்தபோது இன்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை
சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு அங்கிருந்த
பாமக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து அவர்களுக்கும்
போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார்
தடியடி நடத்தினர். இதில் 4 பா.ம.க.,வினர் படுகாயமடைந்தனர். 7 போலீசாருக்கு
லேசான காயமேற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
|