Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
 » சென்னை
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
தமிழகம் » சென்னை
 
துறைமுக திட்டப் பணிகள்: வாசன்


சென்னை, பிப்.8  சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையிலான உயர்மட்ட மேம்பால விரைவு சாலைத் திட்டம், எண்ணூர் துறைமுகத்தையும் சென்னை துறைமுகத்தையும் இணைக்கும் 4 வழி சாலைத் திட்டம், ஆகிய இரு திட்டங்களும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி கே வாசன் சென்னையில் இன்று (பிப்.8)  அளித்த பேட்டி வருமாறு:

சென்னை - எண்ணூர் துறை முகங்களை இணைக்கும் மிக முக்கிய திட்டமான எண்ணூர்- மணலி சாலை மேம்பாட்டு திட்டம், சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையிலான மேம்பால சாலைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களையும் துரிதமாக நடைமுறைப் படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த இரு திட்டங்களும் மிக முக்கியமான திட்டங்கள் என்பதால் இவற்றை துரிதமாக நிறைவேற்று வதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எண்ணூர் - மணலி சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு 150 கோடி ரூபாய் என திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. திருவொற்றியூர்- பொன்னேரி- பஞ்சட்டி ஆகிய பகுதிகளிலும் 4 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்பதாலும், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் சாலையோரம் வடிகால் வசதி உருவாக்க வேண்டும் என்பதாலும், கட்டுமானப் பொருட்களின் விலை வாசி உயர்ந்து விட்டதாலும், இத்திட்டம் மறு மதிப்பீடு செய்யப்பட்டு, இதன் திட்ட மதிப்பீடு ரூ.600 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதில் சென்னை துறைமுகத்தின் பங்கு ரூ.139.80 கோடியாகும். எண்ணூர் துறைமுகத்தின் பங்கு ரூ.34.20 கோடியாகும். இதேபோல சென்னை துறைமுகத்தில் இருந்து  மதுரவாயல் வரையிலான உயர்மட்ட சாலை திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.1655 கோடி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதில் நிலம் கையகப்படுத்துதல், மறு குடியமர்வு, மறு தீர்வு செய்தல் ஆகியவற்றுக்கு ரூ.310 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தொகையும் திட்ட மதிப்பீட்டில் அடங்கும். இதனை சென்னை துறைமுகமும், தமிழக அரசும் சம பங்காக ஏற்பார்கள். இன்னும் 2 வருட காலத்தில் இத்திட்டங்களை செய்து முடிக்க தேவையான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

சுற்றுச்சூழல், நிலம் கையகப்படுத்து தல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனை களுக்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு இத்திட்டங்களுக்கான பணிகள் தொடங்கி குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்படும்.இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்  அதிகாரிகள், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களின் தலைவர்கள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டு கூட்டமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    Print        Tell friend        Top


Other Articles:
மார்ச் 15 மாநகராட்சி பட்ஜெட் - மேயர் (02.08.2010)
70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து (02.08.2010)
சென்னை புறநகர் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு (02.08.2010)
காவலர்கள் திறனாய்வு போட்டி - தமிழகம் சாம்பியன் (02.08.2010)
தமிழகத்திற்கு கூடுதல் நிதி - ஸ்டாலின் வேண்டுகோள் (02.08.2010)
ஜெயராம் மீதான வழக்கு வாபஸ் (02.08.2010)
வளர்ச்சிப் பணிகள் - மேயர் ஆய்வு (02.06.2010)
ஜெயராம் வீடு தாக்குதல் - 4 பேர் கைது (02.06.2010)
ஜெயராம் வீடு எரிப்பு: முதல்வர் கண்டனம் (02.06.2010)
முதல்வருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா (02.06.2010)



 
::| Hot News
தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
கல்லூரி மாணவர் கொலை: பொறியியல் மாணவர்கள் 8 பேர் கைது