கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி பிப்ரவரி 9ஆம் தேதியன்று சென்னை, எத்திராஜ் கல்லூரியில் துவங்கியது.
சந்தோஷம், உற்சாகமூட்டும் ஆரவாரம், சிறிப்பு மற்றும் கலை நிகழ்ச்சி என பல்வேறு வகையான திறமைகளை ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாக மிக சிறப்பாக நடைபெற்ற எத்திராஜ் கல்லூரியின் ‘சிருஷ்டி 2012′ கலை நிகழ்ச்சியினைப் போலவே, அங்கு கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சியும் மிக சிறப்பாகவும், அதே சமயத்தில் மாணவர்களை வெகுவாக கவரும் வகையிலும் நடைபெற்றது.
இப்படத்தின் விளம்பரங்கள் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காபி ஷாப்பில் ஆரம்பித்தது. அந்த காபி ஷாப்பில் பன்னாட்டு காபி வகைகள் மற்றும் சாக்லேட்டுகள் குறைந்த விலையில் படத்தின் விளம்பரத்துடன் விற்கப்பட்டது. மேலும் படத்தின் டிரைலரும் திரையிடப்பட்டது. மாணவர்களை கவர்ந்த பன்னாட்டு காபி வகைகளைப் போலவே படத்தின் டிரைலரும் வெகுவாக கவர்ந்ததாம்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் விளம்பர யுக்தி கல்லூரி மாணவ மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் வெளியீட்டை தாங்கள் ஆர்வமாக எதிர்நோக்கி இருப்பதாகவும் படக்குழுவினரிடம் மாணவ மாணவிகள் தெரிவித்தார்களாம்.
]]>
சமீபத்தில் வெளியாகி மக்களின் அமோகமான வரவேற்பை பெற்றிருக்கும் ‘அம்புலி 3D’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
சிறுவர்கள் கேட்கும் பாட்டி கதைகளை பிரம்மாண்ட காட்சிகள் மூலம் 3Dயில் மிரட்டியிருக்கும் இந்த மர்மக் கதைக்கு கிடைத்த அமோக வரவேற்பு திரையுலகினரை பிரமிக்க வைத்ததுடன், இதுவரை ஆங்கில 3D படங்களை பார்த்து பிரமித்த ரசிகர்களை தனது ஆபார 3D தொழில்நுட்பத்தின் மூலம் அசரவைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஸ் நாராயண்.
அம்புலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முடிவு செய்திருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் கே.டி.வி.ஆர்.லோகநாதன். கேடிவிஆர் ரீல்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் படமாக உருவாகவிருக்கும் அம்புலி 3D இரண்டாம் பாகத்தையும் ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண் ஆகியோர் இணைந்து இயக்கப்போகிறார்கள். முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த சதீஷ்.ஜி உள்ளிட்ட அதே குழுவே இரண்டாம் பாகத்திலும் இணைகிறது.
இப்படத்தை 3D யிலும், மேலும் ஒரு அதிநவீன தொழில்நுட்பத்திலும் வெளியிடப்போவதைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்களாம். முதல் பாகத்தில் தொழில்நுட்ப யுக்திகளை மட்டுமே நம்பி புதுமுகங்களை வைத்து 3D த்ரில் அனுபவத்தை வழங்கிய அம்புலி இயக்குநர்கள், இரண்டாம் பாகத்தில் தொழில்நுட்பம் மட்டுமின்றி பெரிய நட்சத்திரங்களுடனும் கை கோர்க்கப்போகிறார்கள்.
தற்போது அம்புலி இரண்டாம் பாகத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள இயக்குநர்கள், இதில் நடிக்கவிருக்கும் பெரிய நட்சத்திரம் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
]]>
சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற ‘வாலமீனுக்கும்’ என்ற பாடலில் கானா உலகநாதனுக்கு மைக் பிடிக்கும் வேடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ‘வாலமீன்’ முத்துராஜ் நேற்று (பிப்.21) மரணமடைந்தார்.
34 நான்கு வயதான இவருக்கு 20 நாட்களுக்கு முன்புதான் திருமணமானது. சித்திரம் பேசுதடி, வேங்கை, வெளுத்துகட்டு, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, கிழக்கு கடற்கரை சாலை, மருதவேலு, மன்மதன் உள்ளிட்ட 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் முத்துராஜ், நடிகர் கவுண்டமணியின் டச்சப்பாயாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர். பிறகு காமெடி வேடங்களில் நடிக்க துவங்கினார். நடிகர் கவுண்டமணியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த இவரை அடிக்கடி கவுண்டமணி அழைத்து மணிகணக்கில் பேசிக்கொண்டிருப்பாராம். கவுண்டமணியுடன் இணைந்து ‘மன்மதன்’ படத்தில் முத்துராஜ் நடித்திருக்கிறார்.
தேனி, கே.கே.பட்டி முத்துராஜியின் சொந்த ஊர். சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டு மாடியில் உள்ள வாட்டர் டாங்கை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்த முத்துராஜுக்கு தலையில் அடிபட்டது. உடனே அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இரண்டு நாட்கள் கோமாவில் இருந்த முத்துராஜ், நேற்று (பிப்.21) இரவு மரணமடைந்துவிட்டார்.
இவ்வளவு சிறிய வயதில், அதுவும் திருமணமான சில நாட்களில் ஏற்பட்ட முத்துராஜியின் மரணம் அவருடைய சொந்த ஊரான, தேனி, கே.கே.பட்டி மக்களையும், தமிழ் திரையுலகத்தினரையும் பெரும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினரான ‘வாலமீன்’ முத்துராஜியின் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரில் இன்று (பிப்.22) நடைபெறுகிறது. இறுதிச் சடங்கிள் கலந்துகொள்வதற்காக ஏராளமான திரையுலத்தினர் மற்றும் காமெடி நடிகர்கள் தேனிக்கு சென்றிருக்கிறார்கள்.
]]>
வரும் 2016ல் உறுதியாக ஆட்சியைப் பிடிப்போம் என்று சபதம் செய்தார் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த்.
சென்னையில் நடைபெற்ற தேமுதிக கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தொண்டர்களிடையே பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர், “கடந்த தேர்தலில் பதவி ஆசைக்காக நான் அதிமுகவுடன் கூட்டணி சேரவில்லை. மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம். கூட்டணி சேராவிட்டால் பணம் வாங்கிக்கொண்டு கூட்டணி சேரவில்லை என்பார்கள். எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களை போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் போனவர்கள். வரும் 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே! என்றார் விஜயகாந்த்.
]]>
பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஃபெமிடா மிர்ஸாவின் அழைப்பை ஏற்று மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று (பிப்.21) பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பி.பி.பைஷியா மற்றும் ஷனாவாஸ் ஹுசேன் உட்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் கிலானி, பாராளுமன்ற சபாநாயகர் மிர்ஸா, நாடாளுமன்ற தலைவர் பரூக் நேக் ஆகியோரை மீரா குமார் நாளை சந்திக்கிறார்.
தொடர்ந்து, இந்த நாடாளுமன்ற குழு, லாகூருக்கு சென்று பஞ்சாப் ஆளுனர் லத்தீப் கோசா, முதல்வர் ஷாபாஸ் ஷரீப் உள்ளிட்டோ ரை சந்திக்க உள்ளனர்.
மேலும், இந்த குழு பெண்கள் அரசியல் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதுடன் இந்தியா- பாகிஸ்தான் நாடாளுமன்ற நட்புறவு குழுவையும் சந்திக்கின்றனர். மேலும், டேக்ஸிலா பகுதியில் உள்ள புத்தமத பாரம்பரிய தளத்தை பார்வையிட உள்ளனர் எனறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
]]>
தேமுதிக-வின் 7-வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று (பிப்.21) நடந்தது. முதலில் செயற்குழு கூடியது.
இதில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 10 மணிக்கு காரில் வந்தார். அவரது கார் மட்டும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. மற்ற அனைத்து கார்களும் சாலையின் இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
விஜயகாந்த் வந்ததும் அவரது தலைமையில் செயற்குழு கூடியது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பிரேமலதா விஜயகாந்த், மாநில இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர்கள், தொண்டர்கள், வெளியூர் நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.விஜயகாந்தின் சாலி கிராமம் வீட்டில் இருந்து கோயம்பேடு அலுவலகம் வழியாக வானகரம் வரை ரோட்டின் இருபுறமும் கட்-அவுட், பேனர்கள், வாழை மரம், தே.மு.தி.க. கொடி தோரணங்கள் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு இருந்தன.
கூட்டம் நடந்த மண்டபத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அனுமதிக்கும் பணியை தொண்டர் படையினர் மேற்கொண்டனர். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 1,688 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அனுமதி சீட்டுடன் 8.30 மணிக்குள் வருமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொண்டர் படையினர் 8 மணிக்கே வந்து செயற் குழுஉறுப்பினர்கள், நிர்வாகிகளை உள்ளே அனுமதித்தனர்.
போலீசார் சோதனையிடுவது போல் நிர்வாகிகளை தொண்டர் படையினர் சோதனை போட்டனர். செல்போன்கள், பைகள், பெட்டிகள், உள்பட எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூரில் இருந்து வந்த நிர்வாகிகள் தவித்தனர்.
]]>
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மார்ச் 15-ம் தேதி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி 15ம் தேதி சங்கரன்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக, தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 27ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு நடைபெறுகிறது. 5 மற்றும் 6ம் தேதிகளில் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகனும், 12,13 மற்றும் 14ம் தேதிகளில் கட்சி பொருளாளர் ஸ்டாலினும், 15ம் தேதி கட்சி தலைவர் கருணாநிதியும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். .
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகள் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி தலைமையில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
]]>
திருப்பூரில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் 40 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்றிரவு (பிப்.20) நடைபெற்றுள்ளதாக கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் குமரன் சாலையில் உள்ள அந்த நகைக் கடையில் நேற்றிரவு பின்புறமாக துளை போட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். வெல்டிங் கருவி மூலமாக கிரில் கதவுகளை உடைத்துச் சென்ற அவர்கள், அங்கிருந்த தங்கம், வெள்ளி, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
]]>
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை டால்பி சவுண்ட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய பொலிவுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (பிப்.21) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கர்ணன் படத்திற்கு இசையமைத்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி, பாடல் பாடிய பி.சுசீலா, பாட்கர் பி.பி.சீனிவாஸ், படத்தின் இயக்குநர் பந்துலு சார்பாக அவருடைய குடும்பத்தார். படத்தில் நடித்த நடிகர்கள் சண்முகசுந்தரம், மாஸ்ட்டர் ஸ்ரீதர், வி.எஸ்.ராகவன் இயக்குநர் குகுநாதன், கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் இயக்குநர் சேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கர்ணன் படத்தில் பங்குபெற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில், “லண்டன் நாட்டில் ஒரு இடத்தில் உலகத்தில் உள்ள பிரபலமானவர்கள் அனைவருக்கும் மெழுகு சிலை இருக்கிறது. நம்ம ஊரு அமிதாப் பச்சானுக்கு கூட இருக்கிறது. அவர் நல்லவர்தான். நான் என்ன சொல்றனே, அந்த இடத்தில நம்ம சிவாஜி கணேசனுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும். அதற்காக நம்ம தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் யாராவது முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு என்ன செலவு ஆகிறதோ அதற்குண்டான செலவில் நான் ரூ.1 லட்சத்தை கொடுக்கிறேன்.” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் சேரன், “அமிதாப் பச்சனுக்கு மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் அவருக்கு ஒரு முகம் தான், ஒரு பாவனை தான். ஆனால், சிவாஜி சாருக்கு பல முகம், பல பாவனைகள். சிலை செய்பவர்கூட அவருடைய பாவனையை சரியாக செய்ய முடியாது அதனால்தான் அவருக்கு இதுவரை சிலை வைக்க வில்லை.
சிவாஜி சார் கலைக்காகவே வாழ்ந்த ஒரு சிறந்த நடிகர். அதனால்தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. வாழ்க்கையில் நடிக்க தெரியாத நடிகர் அவர். போலியாக பேச தெரியாதவர், அதனால்தான் அவர் அரசியலுக்கு வந்தபோது அவரை தஞ்சாவூரில் தோற்கடித்தீர்கள் நீங்கள். நான் ஒன்றை இங்கு கேட்கிறேன். ரீமேக் என்ற பெயரில் பில்லா, மாப்பிள்ளை என்று எந்த எந்த படத்தையோ மீண்டும் எடுக்கிறீர்களே, சிவாஜி சார் நடித்த ஒரு படத்தை ரீமேக் செய்து பாருங்களே பார்க்கலாம். அது முடியாது எந்த நடிகராலும், சிவாஜி போன்று நடிக்க முடியாது.
அதேபோல நான் இங்கே ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சிவாஜி சார் படத்தலைப்புகளை பிற படங்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி பயன்படுத்துவது ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.” என்று ஆவேசமாகப் பேசினார்.
கர்ணன் படத்தின் உலக உரிமையை ராஜ் தொலைக்காட்சியிடம் இருந்து பெற்று திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாந்தி சொக்கலிங்கம் மறு உருவாக்கம் செய்து வெளியிடுகிறார்.
]]>
மத்திய ரயில்வே அமைச்சர் திரிவேதி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விவரம் வருமாறு;
கே: ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகுமா?
ப: புதிய ரயில்கள் விடுவது மட்டும் நாட்டின் வளர்ச்சி ஆகாது. சமீபகால மாக ரெயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து பலமடங்கு அதிகரித்து உள்ளது. ரெயில்வே துறையை நவீனப்படுத்துதல், அபிவிருத்தி பணிகள், உள்கட்ட மைப்பு வசதிகளை உருவாக்குவது அவசியம் ஆகும். இதுபோன்ற உள்கட்ட மைப்புகள் நவீனப்படுத்துதல் போன்ற திட்டங்கள் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறும்.
கே: ரயில் கட்டணம் உயருமா?
ப: ரயில்வே துறையில் வருமானத்தை பெருக்க பல்வேறு வழிகள் உள்ளன. வருமானத்தை பெருக்க மாற்று வழிகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம். தனியாருடன் இணைந்து வருமானத்தை பெருக்க புதிய திட்டங்களும் வழிமுறைகளும் பட்ஜெட்டில் இடம்பெறும்.
கே: பயணிகளிடம் பாதுகாப்பு வரி வசூலிக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு குழு அறிக்கை தந்துள்ளதே?
ப: பயணிகள் பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து ரெயில்வே பாதுகாப்பு குழு அறிக்கை தந்துள்ளது. அதில் பயணிகளுக்கு பாதுகாப்பு வரி விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. அதனை ரயில்வே துறை செயல்படுத்த வேண்டும் என்று எதுவும் கூற வில்லை.
கேள்வி: மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்: எங்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஒற்றுமையாக உள்ளோம்.
கே: நிதி ஒதுக்குவது தொடர்பாக உங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதா?
ப: எங்களிடையே பிரச்சினை இல்லை. நமது நாட்டில் ரயில்வே துறை போக்குவரத்து பயன்பாட்டுக்கு மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதி நாட்டின் வளர்ச்சிக்கு செய்யப்படும் முதலீடு ஆகும். எனவே ரயில் துறைக்கு கூடுதல் தொகை ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்.
]]>